நூற்றாண்டு தொடக்க நாள் அதிகாலை மத கலாச்சார வைபவம்.

அல் முபாரக் பாடசாலையின் நூற்றாண்டு தொடக்க விழாவின் ஆரம்ப நிகழ்வுகள் மல்வானை மக்களின் கலாச்சாரத்தை பிரதிநிதித்துவம் செய்யும் வகையிலான சமய கலாச்சார நிகழ்வுகள் கடந்த முதலாம் திகதி ஜனவரி மாதம் 2022 காலை 5.45 AM மணிக்கு Al Haj A.R.M Lafir கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் புனித அல் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன் விஷேட துஆ பிரார்த்தனையும் நடைபெற்றது.

ஊர் தரீக்காக்களின் ஆலீம்கள், பள்ளிவாசல்களின் இமாம்கள், ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், மற்றும் உலமாக்கள்அனைவரும் ஒன்றாக இணைந்து  இந்நிகழ்வினை அழகுபடுத்தியது குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக அமைந்திருந்தது.

பாடசாலை அதிபர் S.H.M. Naeem அவர்களின் தலைமையில் இந் நிகழ்வுகளை அல் முபாரக் பாடசாலையின் பழைய மாணவர் குழுவான Metro குழுவினர் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்ததுடன் இந்நிகழ்வின் விஷேட அதிதிகளாக மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி Justice M.T.M. Laffar,  நூற்றாண்டு அபிவிருத்திக் குழு தலைவர் Al Haj A.R.M. Lafir, Al Haj, M.M.A. Ismail,  Al Haj M.M.A. Gafoor ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நிகழ்வில் எமது பாடசாலை உருவாகிய வரலாறு, மற்றும் அதன் முன்னேற்றத்தில் எமது மூதாதையர்களின் பங்களிப்பு போன்ற வரலாற்று சிறப்புமிக்க உரைகளை பழைய மாணவர் சங்கம் சார்பில் முன்னால் மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியும் பழைய மாணவர் சங்கத்தின் பிரதி தலைவருமான Al Haj M.M.M. Gafoor, பாடசாலை சார்பில் பிரதி அதிபர் H.M. Saly, ஊர் சார்பில்  Hameed Al Hussainei பாடசாலையின் முன்னால் பிரதி அதிபர் A.L.M.  Fathah,  மற்றும் 
Metro குழு சார்பில் M.L. Mohamed Hussain ஆகியோர் நிகழ்த்தியதுடன் நனறியுரையினை Metro குழு சார்பில் அதன் அங்கத்தவரும் பாடசாலை பிரதி அதிபருமான A.M.A. Ijlan அவர்களால் வழங்கப்பட்டது.

பாடசாலை சார்பில் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு விடயங்களை பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஆகியன இணைந்து மேற் கொண்டிருந்தனர்.

நிகழ்வின் இறுதியில் மால்வனைக்கே உரித்தான முறையில் விருந்துபசாரம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Media Unit
Old Boys Association
Al Mubarak Central College
(National School)
Malwana

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest