நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் பாடசாலை கட்டிட நிர்மாணம் மற்றும் மேம் பாலம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம்.
நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வினை ஒட்டி நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வே இதுவாகும். எமது ஊரின் தனவந்தரும் Al Muhsin Foundation ஸ்பாகருமான Al Haj M.M.A. Ismail அவர்களின் மூத்த புதல்வரான Al Haj A.I.M. Ashker அவர்களின் நிதியால் பாடசாலை முன்பாக நிர்மானிக்கப்படவுள்ள கட்டிடம் மற்றும் Al Haj M.M.A. Ismail தலைமையிலான Al Muhsin Foundation குடும்பத்தாரினது அனுசரணையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாடசாலையையும் மைதானத்தையும் இணைக்கும் வகையிலான மேம்பாலம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கௌரவ நீதி அமைச்சர் M.U.M. Ali Sabry அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
குறித்த கட்டிடம் மற்றும் மேம்பாலத்திற்கான பெயர்ப் பலகைகளை நீதி அமைச்சர் கௌரவ M.U.M. Ali sabry அவர்கள் திறந்து வைத்ததுடன்
பாடசாலை கட்டிடத்திற்கான அடிக்கல் Al Haj A.I.M. Ashker அவர்களால் நாட்டி வைக்கப்பட்டது.
தொடர்ந்து கௌரவ நீதி அமைச்சர் M.U.M. Ali Sabry, நீதிபதி M.T.M. Laffar, கௌரவ Kader Masthan, Al Haj M.M.A. Ismail, Al Haj A.R.M. Lafir உட்பட ஏனைய அதிதிகளாலும் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
அத்துடன் மேம்பாலத்திற்காக Al Muhsin Foundation குடும்பத்தார் சார்பில் அதன் செயளாளர் M.M.M. Sabir அவர்களால் முதல் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து Al Muhsin Foundation அங்கத்தவர்களாலும் ஏனைய அதிதிகளாலும் அடிக்கல் நாட்டப்பட்டது.
நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் வரலாற்று சிறப்புமிக்க ஒரு அங்கமாக இந்நிகழ்வு அமைந்தது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
Media Unit
Old Boys Association
Al Mubarak Central College
(National School)
Malwana