Old Boys Association

Old Boys Association
Australia & New Zealand Chapter*

அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வாய்ப்புக்கள் (Opportunities Beyond Boundaries) வழிகாட்டல் நிகழ்ச்சி கடந்த 9 ஆம் திகதி மார்ச் மாதம் 2022 புதன்கிழமை அல்லாஹ்வின் உதவியுடன் அல் முபாரக் கனிஷ்ட வித்தியாலய கேட்போர் கூடத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்ச்சிக்கு பங்குபற்றிய மாணவ மாணவியர்கள் குறித்த நிகழ்ச்சியில் பயன்பெற்றிருப்பார்கள் என்று நாம் நம்புகின்றோம்.

குறித்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்னவெனில் எம்மைச் சுற்றி காணப்படும் பல்வேறுபட்ட வாய்ப்புக்களை மாணவர்களாகிய உங்கள் முன் கொண்டு வருவதற்கே….

இந்நிழ்வினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு நிதி மற்றும் ஏனைய அனைத்து விதங்களிலும் ஒத்துழைத்து அதற்குரிய முழு அனுசரனை வழங்கிய பழைய மாணவர் சங்க அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து குழு அனைத்து அங்கத்தவர்களுக்கும் முதலில் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அடுத்ததாக இந்நிகழ்வினை நடாத்துவதற்குறிய அனுமதியினை வழங்கிய பாடசாலை அதிபர் S.H.M. Naeem அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் இதற்காக இலங்கையிலிருந்து  ஒத்துழைத்த பழைய மாணவர் சங்க இணைச்செயளாளர்கள் உட்பட அதன் அங்கத்தவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் பிரதானமாக இந்நிகழ்விற்காக வருகை தந்து மாணவர்களுக்கு சிறப்பான வழிகாட்டலை வழங்கிய வளவாளரும் உளவியல் நிபுணருமான திரு. Manoos Aboobakkar அவர்களுக்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிகழ்வுகளை சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்துவதிலும் ஏனைய அனைத்து விடயங்களையும் ஏற்பாடு செய்வததிலும் ஈடுபட்ட பிரதி அதிபர்களான திரு H.M. Saly மற்றும் திரு A.M.M. Ijlan உட்பட ஆசிரியர்கான திரு Naleef மற்றும திரு Shahmy அவர்களுக்கும் ஆசிரியைகளான திருமதி Nuha, திருமதி Ruwaida மற்றும் திருமதி Naira ஆகிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் இந்நிகழ்வினை நடாத்துவதற்கு பாடசாலையின் வேண்டுகோளினை ஏற்று கேட்போர்கூடத்தினை வழங்கிய அல் முபாரக் கனிஷ்ட வித்தியாலய அதிபர் உட்பட அதன் நிர்வாகத்தினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுதியாக இந்நிகழ்ச்சிக்கு பங்குபற்றி அதன் மூலம் பயன்பெற்ற

# அல் முபாரக் தேசிய பாடசாலை மாணவர்கள்
# அல் மஹ்மூத் பாடசாலை மாணவர்கள்
# கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவர்கள்
# கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரி மாணவர்கள்
# கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவர்கள்
# கொழும்பு ஸாஹிரா கல்லூரி மாணவர்கள்
# அல் முஸ்தபா பாடசாலை மாணவர்கள்
மற்றும்
# அல் முஹ்ஸீன் விஞ்ஞான கல்லூரி மாணவர்கள்

அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நன்றி.

Media Unit
Old Boys Association
Al Mubarak Central College
(National School)
Malwana

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest