பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்.

கடந்த 2022 ஜனவரி முதலாம் திகதி நடைபெற்ற அல் முபாரக் தேசிய பாடசாலை நூற்றாண்டு அங்குரார்பண விழாவில் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.mubarakians.lk என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த இணையத்தளம் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நீதி அமைச்சர் கௌரவ M.U.M. Ali Sabry அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த இணையத்தளம் பழைய மாணவர் சங்கத்தின் இணைச் செயளாளர் Najak Kavfer அவர்களின் ஒருங்கிணைப்புடன் எமது பாடசாலையின் பழைய மாணவரும்  1992 ஆம் ஆண்டு  குழுவின் அங்கத்தவருமான, மென்பொருள் பொறியியலாளர் S K A Hanees அவர்கள் வடிவமைத்து பழைய மாணவர் குழு 1992 சார்பில் பாடசாலை பழைய மாணவர் சங்கத்திற்கு வழங்கியுள்ளனர்.

இதனை சிறப்பான முறையில் வடிவமைத்த S K A Hanees  அவர்களுக்கும் 1992 ஆம் ஆண்டு குழுவினருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest