பொன்னாடை போற்றி கௌரவிப்பு

கடந்த முதலாம் திகதி ஜனவரி மாதம் 2022 அன்று பாடசாலையில் நடைபெற்ற நூற்றாண்டு அங்குரார்பண நிகழ்வின் முக்கிய அங்கமாக பாடசாலையின் நீண்டகால தேவைப்பாடாகவுள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றிற்கான அடிக்கல் தனவந்தர் அல் ஹாஜ் A.I.M. Ashker அவர்களினால் நடப்பட்டது. இக்கட்டிடத்திற்கான முழு செலவும் அல் ஹாஜ் A.I.M. Ashker அவர்களினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

அவரால் மேற்கொள்ளப்படும் இந்த உயர்ந்த உதவிக்காக அவரை கௌரவிக்கும் வகையில் நூற்றாண்டு அபிவிருத்தி தலைவரும் தனவந்தருமான அல் ஹாஜ் A.R.M. Lafir அவர்களினால் அல் ஹாஜ் A.I.M. Ashker அவர்களுக்கு பொன்னாடை போற்றி கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அல்ஹாஜ் A.I.M. Ashker அவர்களினால் வழங்கப்படும் இவ்வுயர்நத நற்பணிக்காக பாடசாலை சமூகம் அனைவர் சார்பாகவும் ஊர் சார்பாகவும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் எல்லாம் வள்ள இறைவன் அவர்களின் வியாபாரத்தில் மென்மேலும் அபிவிருத்தி செய்ய வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

Media Unit
Old Boys Association
Al Mubarak Central College
(National School)
Malwana

Share on facebook
Facebook
Share on google
Google+
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on pinterest
Pinterest